கனவும் பொருளும்

அலுவலக நன்பர் ஒருவருக்கு கடந்த 23ஆம் தேதி ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் வந்தபோது ஓட்டுநர் கண் அயர்ந்துவிட்டார். வலது பக்கமாக வளையும் சாலையில் வளையாமல் நேரே சென்றதால், வண்டியின் இடது பக்கம் மரத்தில் மோதியது. நன்பர் இடதுபக்கம் முன்னிருக்கையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இருக்கை வாரை அணிந்திருக்கவில்லை. தலையிலும் மார்பிலும் நல்ல அடி. விபத்து நடந்த இருபது நிமிடத்தில் எங்களது மேலாளர் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தார். இதில் குறிப்பிடத்தக்க செய்தி நன்பருக்கு அந்த மேளாலரைக் கண்டால் ஆகாது.

விபத்து நடந்தது 23ஆம் தேதி காலை ஆறு மணி வாக்கில். பெங்களூரில் பனஷங்கரிக்குச் செல்லும் ரிங்ரோடில் சில்க்போர்ட் சந்திப்பிற்க்குச் சற்று முன்னால்.

இச்சம்பவத்தை இங்கே பதிவதற்கு முக்கியமான காரணம் நன்பர் விபத்து நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு, 20ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிந்திருந்த இடுகை. அது கீழே.

நன்பர் பதிந்திருந்த ஃபேஸ்புக் இடுகை
கனவு பற்றிய நன்பரின் ஃபேஸ்புக் இடுகை

“வண்டியைப் பார்த்து ஓட்டுங்கள் என நான் அவரிடம் கூறுகிறேன்.”

கோரமங்களாவில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது நலம்.

இச்சம்பவம் கனவுகளைப் பற்றி நிறைய சிந்திக்கவைத்தது. கனவுகளைப் பொருள் புரிந்துகொள்வது, கனவிற்கும் எதிர்காலத்திற்கும் உள்ள பிணைப்பு என பலப்பல.

கனவைப் பற்றிய இன்னொரு முக்கியமான நிகழ்வும் நினைவிற்கு வருகிறது. டேஜாவூ (Dejavu) போன்றது. அதைப் பிறகு பதிகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *