சிங்கம் ஒன்று

வில்லுப்பாட்டு

இந்தப் பாட்ட மனசுல ஓட்டுங்க: சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் – பொறந்திருக்கு நேரம் – கனிஞ்சிருக்கு ஊரும் – தெளிஞ்சிருக்கு உண்மை – புரிஞ்சிருக்கு சிங்கம் ஒன்று புறப்பட்டதே இப்ப இது ? தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமா – வில்லினில் பாட ஆமா – வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே

ரிசர்வேசன்

“இந்த ரிசர்வேசனால தான்ங்க இந்தியா இன்னும் வளரும் நாடாவே இருக்கு” “அப்ப ரிசர்வேசனுக்கு முன்னாடி இரெண்டாயிரம் வருசமா இந்தியா வளந்த நாடா இருந்துச்சா? பாலாறும், தேனாறும் ஓடுனுச்சா?”

கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்

அமேசானுக்குத் தமிழ் மொழி மேல் அப்படியென்ன மெத்தனமோ? புதிதாக கின்டில் பேப்பர்வைட் வாங்கி, ஆவலுடன் பிரித்து, ஒரு தமிழ் மின்னூலை தரவேற்றிப் படிக்க முனைந்தபோது பெருத்த ஏமாற்றம். மிக மோசமான எழுத்துரு! இந்த எழுத்துருவின் பழமையான வடிவம் கவர்ச்சியைத் தந்தாலும், நிறைவடையாத அரைகுரை இது. பல இடங்களில் மெருகேற்றம் தேவை. நல்லவேளையாக, இந்த எழுத்துருத் தொல்லையை நிவர்த்தி செய்வது மிக எளிது. அமேசான், கின்டில் எழுத்துருக்களைத் தனிப்பயனாக்க ஒரு மறைமுக வழியை வைத்துள்ளது. அதன்படி இதற்குத் தேவையான… Continue reading கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்

ஏறு தழுவல் தடை – ஒளிந்திருக்கும் அரசியல்

ஏறு தழுவுதல்

வரலாறு மற்றொருமுறை திரும்புகிறது; இம்முறை எறுதழுவலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையிலிருந்து. மனித மற்றும் விலங்கு நல விரும்பிகள் சிலர் உண்மையிலே அக்கரையோடு இவ்விளையட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்களை வைத்துப் பிண்ணனியில் விளையாடுகிறது வேறொரு கூட்டம். அவர்களின் நோக்கம் மிக அற்பமானது. வரலற்றை திரிக்கும் கூட்டம் அது. அவர்களது நோக்கமும் அதுவே. ஏறு தழுவுதல், காளைகளைப் போறிப் பாதுகாக்கும் தமிழ்த் தொண்மம். விளையாட்டை முறைப்படுத்தி விளையாடுகையில், மிருகவதை என்பதெல்லாம் மிகச்சில. மற்ற விளையாட்டுகளையும், கேரளா போன்ற நேரடி மாடுவதை கூடங்களையும்… Continue reading ஏறு தழுவல் தடை – ஒளிந்திருக்கும் அரசியல்

வெண்பா விளையாட்டு

#வெண்பாவிளையாட்டு : Ice bucket challenge போல ஒரு விளையாட்டை விளையாடுவோமா? போட்டி இதுதான்: யாராவது ஒருவர் உங்களுக்கு வெண்பா ஈற்றடி தருவார். அதை வைத்து ஒரு வெண்பா இயற்ற வேண்டும். மேலும் நீங்கள் ஒரு புதிய வெண்பா ஈற்றடியை உருவாக்கி இரு நபர்களுக்கு முன்னனுப்பி அவர்களை போட்டிக்கு அழைக்கவேண்டும். எவ்வகை வெண்பா வேண்டுமானாலும் இயற்றலாம். சமுக வலைத்தளங்களில் #வெண்பாவிளையாட்டு அல்லது #வெவி என்ற குறியீட்டை (tag) மறக்காமல் பயன்படுத்தவும்.

லினக்ஸ்.காமில் எனது பேட்டி

இந்த எளியவனின் கருத்து linux.com இன் இன்றய சிறப்புக் கட்டுரையில் (May 15, 2014) வெளிவந்திருக்கிறது.   கட்டுரையின் உரலி: http://www.linux.com/news/enterprise/biz-enterprise/772853-linux-jobs-today-a-special-report

வடசொல்லுக்கு வல்லினம் மிகுமா?

இந்தக் கீச்சிலிருந்து தான் விவாதம் ஆரம்பித்தது. நன்பர் KRS அவர்கள் நிறைய கேள்விகளை முன்வைத்தார். அவருக்கு மறுமொழி கூறுவதே இப்பதிவின் நோக்கம் (திறந்த மடல்). முழுவிவாதத்தைப் பார்க்க கீழே கீச்சில் உள்ளத் தேதியைச் சொடுக்கவும். @kryes //தமிழ்ச் சினிமா// ச் வரக்கூடாதே… — Suren 🍂 (@ssurenr) April 29, 2014 தமிழ்ச் சினிமாவா? தமிழ் சினிமாவா? அதற்குச் செல்லும் முன்னர். சில அடிப்படை விளக்கங்கள் தரவேண்டியுள்ளது. எழுத்து எழுத்து என்பது என்ன? நன்னூலில் இது தெளிவாக… Continue reading வடசொல்லுக்கு வல்லினம் மிகுமா?

மந்தியும் குட்டியும்

குரங்கும் குட்டியும்

@Jen_guru செங்கை சுடினும் சறுக்காது; சுட்டாலும்வெங்கைப் பிடியும் வழுக்காது – குட்டியைதங்கத்தாய் பேணும் தகைமை நிகருமேபுங்கை மரத்தின் நிழல் — Suren 🍬 (@ssurenr) April 18, 2014