சுரேந்தர்

  • Getting Married!
Illustration of a bird flying.
  • சிங்கம் ஒன்று

    வில்லுப்பாட்டு

    இந்தப் பாட்ட மனசுல ஓட்டுங்க: சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் – பொறந்திருக்கு நேரம் – கனிஞ்சிருக்கு ஊரும் – தெளிஞ்சிருக்கு உண்மை – புரிஞ்சிருக்கு சிங்கம் ஒன்று புறப்பட்டதே இப்ப இது ? தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமா – வில்லினில் பாட ஆமா – வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே

    January 19, 2016
  • ரிசர்வேசன்

    “இந்த ரிசர்வேசனால தான்ங்க இந்தியா இன்னும் வளரும் நாடாவே இருக்கு” “அப்ப ரிசர்வேசனுக்கு முன்னாடி இரெண்டாயிரம் வருசமா இந்தியா வளந்த நாடா இருந்துச்சா? பாலாறும், தேனாறும் ஓடுனுச்சா?”

    December 31, 2015
  • தனியார்

    அரசு அலுவல் அருமையாய் போகும் தனியார் வரும்வரை அங்கு. 

    December 10, 2015
  • கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்

    அமேசானுக்குத் தமிழ் மொழி மேல் அப்படியென்ன மெத்தனமோ? புதிதாக கின்டில் பேப்பர்வைட் வாங்கி, ஆவலுடன் பிரித்து, ஒரு தமிழ் மின்னூலை தரவேற்றிப் படிக்க முனைந்தபோது பெருத்த ஏமாற்றம். மிக மோசமான எழுத்துரு! இந்த எழுத்துருவின் பழமையான வடிவம் கவர்ச்சியைத் தந்தாலும், நிறைவடையாத அரைகுரை இது. பல இடங்களில் மெருகேற்றம் தேவை. நல்லவேளையாக, இந்த எழுத்துருத் தொல்லையை நிவர்த்தி செய்வது மிக எளிது. அமேசான், கின்டில் எழுத்துருக்களைத் தனிப்பயனாக்க ஒரு மறைமுக வழியை வைத்துள்ளது. அதன்படி இதற்குத் தேவையான […]

    June 10, 2015
  • ஏறு தழுவல் தடை – ஒளிந்திருக்கும் அரசியல்

    ஏறு தழுவுதல்

    வரலாறு மற்றொருமுறை திரும்புகிறது; இம்முறை எறுதழுவலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையிலிருந்து. மனித மற்றும் விலங்கு நல விரும்பிகள் சிலர் உண்மையிலே அக்கரையோடு இவ்விளையட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்களை வைத்துப் பிண்ணனியில் விளையாடுகிறது வேறொரு கூட்டம். அவர்களின் நோக்கம் மிக அற்பமானது. வரலற்றை திரிக்கும் கூட்டம் அது. அவர்களது நோக்கமும் அதுவே. ஏறு தழுவுதல், காளைகளைப் போறிப் பாதுகாக்கும் தமிழ்த் தொண்மம். விளையாட்டை முறைப்படுத்தி விளையாடுகையில், மிருகவதை என்பதெல்லாம் மிகச்சில. மற்ற விளையாட்டுகளையும், கேரளா போன்ற நேரடி மாடுவதை கூடங்களையும் […]

    January 16, 2015
  • வெயில் படாத இருக்கையை முன்பதிவது எப்படி?

    பேருந்தில் இடம்பிடிக்கையில் நம் அனைவருக்குள்ளும் உறங்கும் செல்டன் கூப்பர் விழித்துக்கொள்கிறான். அதுவும் காலியான பேருந்து என்றால் கேட்கவே வேண்டாம். செல்டன் கூப்பர் யாரென்று கேட்பவர்களுக்கு, இதோ “செல்டன் கூப்பர்: ஓர் எளிய அறிமுகம்”. பேருந்து முன்பதிவு வலைதளங்களில் படத்தைப் பார்த்து எங்கே வெயில் படும் எங்கே படாது என்று உங்களால் சொல்ல முடியுமா? முடியும் என்றால் உங்களுக்கும் இந்தப் பதிவு தேவையில்லை. மற்றவர்கள் மேற்கொண்டு படிக்கவும். வெயில் படாத இடத்தில் முன்பதிவு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    September 1, 2014
  • வெண்பா விளையாட்டு

    #வெண்பாவிளையாட்டு : Ice bucket challenge போல ஒரு விளையாட்டை விளையாடுவோமா? போட்டி இதுதான்: யாராவது ஒருவர் உங்களுக்கு வெண்பா ஈற்றடி தருவார். அதை வைத்து ஒரு வெண்பா இயற்ற வேண்டும். மேலும் நீங்கள் ஒரு புதிய வெண்பா ஈற்றடியை உருவாக்கி இரு நபர்களுக்கு முன்னனுப்பி அவர்களை போட்டிக்கு அழைக்கவேண்டும். எவ்வகை வெண்பா வேண்டுமானாலும் இயற்றலாம். சமுக வலைத்தளங்களில் #வெண்பாவிளையாட்டு அல்லது #வெவி என்ற குறியீட்டை (tag) மறக்காமல் பயன்படுத்தவும்.

    August 18, 2014
  • தைல மரம்

    சிற்றூர்தி நெரிசலில் யூக்கலிப்டஸ் வாசனை; நேற்று பொழிந்த மழை.

    May 31, 2014
  • லினக்ஸ்.காமில் எனது பேட்டி

    இந்த எளியவனின் கருத்து linux.com இன் இன்றய சிறப்புக் கட்டுரையில் (May 15, 2014) வெளிவந்திருக்கிறது.   கட்டுரையின் உரலி: http://www.linux.com/news/enterprise/biz-enterprise/772853-linux-jobs-today-a-special-report

    May 15, 2014
  • வடசொல்லுக்கு வல்லினம் மிகுமா?

    இந்தக் கீச்சிலிருந்து தான் விவாதம் ஆரம்பித்தது. நன்பர் KRS அவர்கள் நிறைய கேள்விகளை முன்வைத்தார். அவருக்கு மறுமொழி கூறுவதே இப்பதிவின் நோக்கம் (திறந்த மடல்). முழுவிவாதத்தைப் பார்க்க கீழே கீச்சில் உள்ளத் தேதியைச் சொடுக்கவும். @kryes //தமிழ்ச் சினிமா// ச் வரக்கூடாதே… — Surendhar (@ssurenr) April 29, 2014 தமிழ்ச் சினிமாவா? தமிழ் சினிமாவா? அதற்குச் செல்லும் முன்னர். சில அடிப்படை விளக்கங்கள் தரவேண்டியுள்ளது. எழுத்து எழுத்து என்பது என்ன? நன்னூலில் இது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. […]

    May 3, 2014
1 2
Next Page→

சுரேந்தர்

Proudly powered by WordPress