ச – உச்சரிப்பு

இரண்டு நாட்கள் முன்பு ‘ச’ எழுத்தின் உச்சரிப்பைப் பற்றி சில சந்தேங்களை திரு. சொக்கன் அவர்கள் பதிந்திருந்தார். அதைப்பற்றிய என் எண்ணங்கள் இங்கே.

குறிப்பு:
இந்த பதிவு முழுதும் ‘ச என்பதை ‘chaஎன்றே எடுத்துக்கொள்ளவும். sa என்ற உச்சரிப்புக்கு ‘ஸ பயன்படுத்தி உள்ளேன். cha-வா? sa-வா? என்று குழப்பம் உள்ள இடங்களில் சிகப்பு நிறத்தில் ‘ வரும்.

தமிழ் ஒலிப்பு முறை

தமிழ் மொழியோட சிறப்புக்களில் ஒன்று அதன் ஒலிப்பு முறை. நாம் உச்சரிக்கும் ஒரு தனிப்பட்ட ஒலியைத்தான் எழுத்து என்கிறோம். உதாரணமா அ,ம்,மா இந்த மூணு தனித்தனி ஒலிகளை தொடரா உச்சரிக்கும் பொது அம்மா என்ற சொல்லின் உச்சரிப்பு வந்துடுது. இதை வைத்து தான் -வின் உச்சரிப்பைக் கண்டறிய முயற்சித்துள்ளேன். 😉

தமிழ் மொழியில் ஒரு எழுத்துக்கு ஒரு ஒலி தான். ஒரு ஒலிக்கு ஒரு எழுத்து தான். இரு வேறு ஒலியுடன் ஒரு எழுத்துக் குறியீடு கிடையாது. எனவே என்பது ஒன்று ‘ச(cha) வாக இருக்கணும் இல்லன்னா ‘ஸ(sa) வாக இருக்கணும்.

  1. வல்லினம்
    தமிழ் மொழியில் என்பது வல்லினம். சற்று அழுத்தி ஒலிப்பவை. ‘ஸஎன்ற உச்சர்ப்பு நிச்சயம் வல்லினம் அல்ல. எனவே ச என்பதே சரியான உச்சரிப்பாக இருக்கவேண்டும்.
  2. வல்லினம் மிகும் இடங்கள்.
    பறித்து, சென்றான். இந்த இரு வார்த்தைகளை தொடராய் ஒலிக்கும் போது நடுவில் வல்லின சொல் ஒன்று புதிதாய் பிறக்கிறது. இது சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு நிகழ்வு. இதை இலக்கணமாகவும் நாம் படித்திருப்போம்.
    பறித்து ஸென்றான் என்று உச்சரிக்கையில் புதிய ஒலி ஏதும் இடையில் பிறக்கவில்லை.
    பறித்து சென்றான் என்று உச்சரிக்கையில் நிச்சயமாக ச் மிகுகிறது.
    எனவே என்பதைச் ச
    (cha)என்று ஒலிப்பதே சரியான முறை என் அறியமுடிகிறது.
  3. பிற மொழிகளில் தமிழ்ச் சொற்கள்
    தெலுங்கு மொழியை எடுத்துக்கொள்வோம். மிக முந்தய காலத்தில் தமிழிலிருந்து பிறந்த மொழி. இம்மொழியில் பல தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன.
    செப்பு’ என்பது ஓர் உதாரணம். இதை நம்மில் சிலர் ஸெப்பு என்று உச்சரிக்கிறோம். தெலுங்கர்கள் அனைவரும் செப்பு(cheppu) என்றே உச்சரிக்கின்றனர்.
    சரியான உச்சரிப்பு ச வாகத்தான் இருக்க வேண்டும்.
     
  4. தமிழ் ஓசைகளின் துல்லியம்.
    ‘ரஒலிக்கும் ‘ற ஒலிக்கும், ‘ந,ன,ண ஒலிகளுக்கும், ‘ல,ள,ழ ஒலிகளுக்கும் இடையில் இருக்கும் நுட்பமான ஒலி வேறுபாட்டிற்காக தனித்தனி எழுத்துக்களை வகுத்தவர்கள், ச விற்கும் ஸ விற்கும் இவ்வளவு பெரிய ஒலி வேறுபாடு இருந்தும் ஒரே எழுத்தையா கையாண்டிருப்பார்கள்?
    ‘ஸ
    என்ற ஒலி தமிழில் இருந்திருக்காது.
  5. ‘ஸ எதற்கு?
    என்ற எழுத்துக்கு ச என்ற ஒலியும் ஸ என்ற ஒலியும் இருந்திருக்கும் என்றும் வைத்துக்கொண்டால், பிறகு எதற்கு ‘ஸ
    என்ற எழுத்து?
    இதை எல்லாம் பாக்கும்போது ச (cha) என்பதே சரியான ஓரே உச்சரிப்பு என்று படுகிறது.

வட மொழிச் சொற்களைப் பயன்படுத்த ஸ பயன்படுத்தலாம். ‘ஸ என்ற ஒலி தமிழில் இல்லாதிருந்த சமையத்தில் ‘ச சொல்லை பயன்படுதியிருக்கக்கூடும். பிற்காலத்தில் ‘ச வையும் ‘ஸ என்றே கூறுகிறோம்.

பின்குறிப்பு 1: ‘அ வும் ‘இ யும் சேர்கையில், ‘ஐ ஒலிக்கு மிக நெருக்கத்தில் இருக்கும். அதே போலத்த்தான் ‘ஞ் உம், ‘ச வும் சேர்கையில், ‘ஜ ஒலிக்கு மிக மிக நெருக்கத்தில் ஒலிக்கிறது. ஆனால் நிச்சயம் வித்தியாசம் உண்டு. தஞ்சை(‘ச வில் அழுத்தம்), தன்ஜை – ஒலி வேறுபடுகிறது.

பின்குறிப்பு 2: சைதாப்பேட்டை. இதை ஸைதாப்பேட்டை என்று ஒருவர் கூறியிருந்தார். இத்தொடரைப் படியுங்கள். “அவனைத் தேடிச் சைதாப்பெட்டைக்குச் சென்றான். சைதாப்பேட்டை(chai) தானே படிக்கிறீங்க?
தப்பவே படிச்சு பழகிட்டோம். அதான் நெருடுது. புழங்கப் புழங்கப் பழகிடும்.

இதுவரை சொன்ன அனைத்திற்கும் எடுத்துக்காட்டாய் ஒரு குறள்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

கருத்துக்கள்  வரவேர்க்கப்படுகின்றன 🙂