-
தனியார்
அரசு அலுவல் அருமையாய் போகும் தனியார் வரும்வரை அங்கு.
-
தைல மரம்
சிற்றூர்தி நெரிசலில் யூக்கலிப்டஸ் வாசனை; நேற்று பொழிந்த மழை.
-
மந்தியும் குட்டியும்
@Jen_guru செங்கை சுடினும் சறுக்காது; சுட்டாலும்வெங்கைப் பிடியும் வழுக்காது – குட்டியைதங்கத்தாய் பேணும் தகைமை நிகருமேபுங்கை மரத்தின் நிழல் — Suren (@surenify) April 18, 2014
-
நுங்கு
மதிய வெயிலின் கதிரினை நன்றாய் மழுக்கித் தணிக்குமே நுங்கு.