தனியார்

அரசு அலுவல் அருமையாய் போகும்
தனியார் வரும்வரை அங்கு. 

வெண்பா விளையாட்டு

#வெண்பாவிளையாட்டு : Ice bucket challenge போல ஒரு விளையாட்டை விளையாடுவோமா?

போட்டி இதுதான்:

யாராவது ஒருவர் உங்களுக்கு வெண்பா ஈற்றடி தருவார். அதை வைத்து ஒரு வெண்பா இயற்ற வேண்டும். மேலும் நீங்கள் ஒரு புதிய வெண்பா ஈற்றடியை உருவாக்கி இரு நபர்களுக்கு முன்னனுப்பி அவர்களை போட்டிக்கு அழைக்கவேண்டும்.

எவ்வகை வெண்பா வேண்டுமானாலும் இயற்றலாம். சமுக வலைத்தளங்களில் #வெண்பாவிளையாட்டு அல்லது #வெவி என்ற குறியீட்டை (tag) மறக்காமல் பயன்படுத்தவும்.

தைல மரம்

சிற்றூர்தி நெரிசலில் யூக்கலிப்டஸ் வாசனை;
நேற்று பொழிந்த மழை.

மந்தியும் குட்டியும்

குரங்கும் குட்டியும்

கூரையில் சிறுமி

கூரையில் சிறுமி

 

நுங்கு

மதிய வெயிலின் கதிரினை நன்றாய்
மழுக்கித் தணிக்குமே நுங்கு.